உள்ளுராட்சி மன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் பொலிஸார் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 19 December 2017

உள்ளுராட்சி மன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் பொலிஸார்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் பொலிஸார்
248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் பணி நேற்று ஆரம்பமானது.
இதற்கமைவாக சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக 15 ஆயிரம் பொலிஸார் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்ட விதிமுறைக்கு அமைவாக நாட்டில் எந்தவொரு இடத்திலும் எத்தகைய தேர்தல் ஊர்வலமும் நடத்தப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊர்வலம் நடத்தப்படுவது தொடர்பிலான சட்டம் கடுமையாக நடத்தப்படும் என்று பொலிஸ் அத்தியட்சகரும் ஊடகப்பேச்சாளருமான சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார்.
இது குறித்த சட்ட விதிகள் உள்ளடங்கிய வர்த்தமானி இடம் பெற்றுள்ளது. எவரேனும் பொலிஸாரின் உத்தரவை கவனத்தில் கொள்ளாது ஊர்வலம் நடத்தப்பட்டால் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக பிரதி பொலிஸ் மா அதிபர் தேர்தல் அலுவலகத்தினால் கைது செய்யப்படுவார்கள்.

தேர்தல் முடிவடையும் வரையில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக தேர்தல் பிரசார நடவடிக்கைக்கு பொலித்தீனை பயன்படுத்துவதும் முற்றாக தடைசெய்யப்படுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages