இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் மும்பை சிட்டி எப்.சி அணி, நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி.யை 2-0 என வீழ்த்தி வெற்றி பெற்றது. - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2017

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் மும்பை சிட்டி எப்.சி அணி, நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி.யை 2-0 என வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் மும்பை சிட்டி எப்.சி அணி, நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி.யை 2-0 என வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஐ.எஸ்.எல். கால்பந்து: நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி.யை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவுசெய்தது மும்பை சிட்டி எப்.சி

கொச்சி:
10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய 28-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி - நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணியை எதிர்கொண்டது.

இப்போட்டி தொடங்குவதற்கு முன்னர், மும்பை சிட்டி எப்.சி. அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு டிரா, மூன்று தோல்வியுடன் ஐந்தாவது இடத்தில் இருந்தது. நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு டிரா, மூன்று தோல்வியுடன் ஒன்பதாவது இடத்தில் இருந்தது.


விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 34-வது நிமிடம் மும்பை அணியின் பல்வந்த் சிங் கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் மும்பை அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 68-வது நிமிடம் மும்பையின் பல்வந்த் சிங் இரண்டாவது கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் எவ்வளவு முயற்சித்தும் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்க முடியவில்லை. இதையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள மும்பைக்கு இது மூன்றாவது வெற்றியாகும். இந்த போட்டியில் வென்ற மும்பை 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

நாளை பெங்களுருவில் நடைபெறும் லீக் போட்டியில் பெங்களுரு எப்.சி - ஜேம்ஷெத்பூர் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages