சிலி நாட்டில் நிலநடுக்கம் - ரிக்டரில் 5.0 புள்ளிகளாக பதிவு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2017

சிலி நாட்டில் நிலநடுக்கம் - ரிக்டரில் 5.0 புள்ளிகளாக பதிவு


பசிபிக் பெருங்கடலோரம் தென் அமெரிக்காவின் மேற்கே அமைந்துள்ள சிலி நாட்டில் நேற்று 5.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.


சான்ட்டியாகோ:

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கலாமா நகரின் தென்மேற்கே பூமியின் அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நேற்று மாலை சுமார் 6:58 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12:28 மணிக்கு) நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்துக்கு பயந்து மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி பதற்றத்துடன் வீதியில் கூடினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages