பாடசாலை பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறும் இடங்களில் பொலிஸார் கடமையில் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2017

பாடசாலை பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறும் இடங்களில் பொலிஸார் கடமையில்

பாடசாலை பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறும் இடங்களில்  பொலிஸார் கடமையில்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறும் இடங்களில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் நடைபெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்முறைகளை குறைக்கும், சிறுவர், பெண்களை பாதுகாக்கும் பொருட்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நேற்று முன்தினம் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஒன்று கூடலின் போதே பொலிஸார் இவ்வாறு தெரிவித்தனர்.


மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் ஒரு சிலர், பாடசாலை மாணவர்களுக்கு தொந்தரவு வழங்குவதாகவும், அதிவேகமாக பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறும் இடங்களின் முன்பு மோட்டார் சைக்கிளை செலுத்துவதாகவும் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்களினால் கூறப்பட்டதற்கமைய அவ்விடங்களில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் கூறினர்.

அதேபோன்று பாடசாலைக்கு செல்லாமல் இடைவிலகிநிற்கின்ற மாணவர்கள், வரவு குறைவான மாணவர்களை இனங்கண்டு, அதற்கான பிரச்சனைகளை ஆராய்ந்து, மாணவர்களை பாடசாலையோடு இணைக்கும் செயற்பாட்டில் அனைத்து கிராமசேவை உத்தியோகத்தர்களும், சமூர்த்தி உத்தியோகத்தர்களும் ஈடுபடுமாறும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

பாடசாலையில் நடைபெறும் மாணவர்களின் ஒழுக்கமின்மை தொடர்பில், ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியே செல்வதாயின் அதற்கான அனுமதியைப்பெற்றே செல்ல வேண்டும். இது தொடர்பிலும் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் கூறினார்.

இந்த ஒன்றுகூடலில், வலயக்ககல்விப் பணிப்பாளர், உதவிப்பிரதேச செயலாளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர், பொலிஸார் மற்றும் செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages