ஆரம்பமானது புதிய கூட்டமைப்பின் ஒன்று கூடல்.! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 24 December 2017

ஆரம்பமானது புதிய கூட்டமைப்பின் ஒன்று கூடல்.!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் களமிறங்கும் புதிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு இன்று காலை நடைபெற்றது.
குறித்த கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது.
புதிய தேர்தல் முறை பற்றிய விடயங்கள், தேர்தலின் போது வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இதில் விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த கருத்தரங்கில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்களான ம. தியாகராஜா, இ. இந்திரராசா, ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்த்தர் செந்தில்நாதன் உள்ளிட்ட பிரமுகர்களும் அங்கத்துவ கட்சிகளின் செயற்பாட்டாளர்களும், வேட்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages