மூவர் கைது, ஏழ்வர் தப்பியோட்டம் : நடந்தது என்ன.? - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 24 December 2017

மூவர் கைது, ஏழ்வர் தப்பியோட்டம் : நடந்தது என்ன.?


பொகவந்தலாவ - கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தின் மாட்டுக்கு புல் ஆறுக்கும் வயல் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது செய்யபட்டுள்ளனர். 
மேலும், நேற்று இரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற, இந்த சம்பவத்தின் போது, ஏழ்வர் தப்பிச் சென்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 
அத்துடன், இதன்போது சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 
குறித்த பகுதியில் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்ற இந்த நடவடிக்கை காரணமாக, கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் இருந்து, தமிழ் வித்தியாலயத்திற்கு செல்லும் மாணவர்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்திய பிரதான பாதையும் சேதமடைந்துள்ளதாக, மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 
எனவே, இந்த சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேருக்கும் பொலிஸாரால் பிணை வழங்கப்பட்டுள்ளது. 
அத்துடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 2ம் திகதி மீண்டும் ஹட்டன் நீதாவன் முன்னிலையில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages