வயிற்றுக்கு நன்மை தரும் தயிர் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 23 December 2017

வயிற்றுக்கு நன்மை தரும் தயிர்

Related image
வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பால், தயிர், நெய் இவை மூன்றும் மனித இனத்துக்கு பசு வழங்கும் கொடை என்பார்கள். குழந்தை முதல் முதியவர்கள் வரை பால் பொருள் உணவுகளை சாப்பிடலாம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. உணவாக மட்டுமில்லாமல் பல நோய் பிரச்சினைகளுக்கு மருந்தாகவும் இருக்கிறது. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். தயிர் குளிர்ச்சியானது மட்டுமல்ல, நல்ல ஜீரண சக்தியை தரக்கூடியதாகும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில், 32 சதவீதம் பால்தான் ஜீரணமாகும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் ஜீரணிக்கப்பட்டுவிடும்.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரித்து, நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. எனவே தான் வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது வெந்தயத்துடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர்+வெங்காயம் சேர்க்கப்படுகிறது. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்கு தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசனையாக இருக்கும்.
Image result for வயிற்றுக்கு நன்மை தரும் தயிர்
புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும். தயிர் புளிக்காமல் 23 நாள் இருக்க, சிறிய தேங்காய்த்துண்டு சேர்த்தால் புளிக்காது. வெண்டைக்காய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும். வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும்.

கோடை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சாப்பிடலாம். தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதியம். தயிருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், வாய்ப்புண், பல் வலி குணமாகும். காரணம், இதில் ஆன்டிபாக்டீரியல் தன்மைகள் ஏராளமான அளவில் உள்ளன. தயிருடன் ஓமம் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையில் இருந்து விடுபடலாம். 

தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். இது சிறுநீரக பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும். தயிருடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோபயோடிக் பாக்டீரியாக்கள், பெப்ரைன் ஆகியவை மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சினையில் இருந்து விடுவிக்கும். தயிர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் மூட்டு வலியைக் குறைக்க உதவும். இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், முதுமையையும் தடுக்கும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages