கடற்படையினரின் நீரளவியல் கணக்கெடுப்பின் இரண்டாவது கட்டம் நிறைவு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 21 December 2017

கடற்படையினரின் நீரளவியல் கணக்கெடுப்பின் இரண்டாவது கட்டம் நிறைவு

கடற்படையினரின் நீரளவியல் கணக்கெடுப்பின் இரண்டாவது கட்டம் நிறைவு
இந்திய - இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பின் இரண்டாவது கட்ட செயற்பாடுகள் நிறைவுபெற்றது.
கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல் சுட்லேஜின் வருகையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்பாடுகள் நேற்று முன்தினம் நிறைவுபெற்றது.

இவ்வளவீடு, கொழும்பு முதல் காலி வரையிலான கடற்பிராந்திய கடலோரத்தில் இருந்து 200 மீட்டர் ஆழம் வரை விஸ்தரிக்கப்பட்டது. குறித்த தரவு சேகரிப்பானது, 2004ஆம் ஆண்டு சுனாமியினால் ஏற்பட்ட வரைபட மாற்றத்தை அறிந்துகொள்ள உதவியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அடுத்த வருடம் கிரேட் பேசஸிலிருந்து சங்கமன்கந்த வரை மூன்றாவது கட்ட நீரளவியல் கணக்கெடுப்பினை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த நீரளவியல் கணக்கெடுப்பின் அறிக்கைகளை கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ வைபவத்தின் போது ஐஎன்எஸ் சுல்டேஜ் கப்பலின் கட்டளைத்தளபதி கப்டன் திரிபுவன் சிங், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்கவிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை கடற்படையின் பிரதம நீரியல் அளவீட்டாளர் ரியர் அட்மிரல் சிசிர ஜெயக்கொடி, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages