கால்களுக்கு வலிமை தரும் மேரு தண்டாசனம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2017

கால்களுக்கு வலிமை தரும் மேரு தண்டாசனம்

முதுகு தண்டு, கால்கள், இடுப்பு, வயிற்று பகுதியை வலிமைப்படுத்தும் ஆசனம் இது. இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கால்களுக்கு வலிமை தரும் மேரு தண்டாசனம்
செய்முறை :
 விரிப்பில் கால்களை முன்புறம் நீட்டி அமர வேண்டும். படத்தில் காட்டியவாறு முழங்கால்களை மடக்கி, கால் விரல்களை கைகளால் பிடிக்க வேண்டும்
பார்வையை முன்புறம் ஒரே இடத்தில் பதிக்க வேண்டும். பயிற்சி முடியும் வரை பார்வையை திருப்பக் கூடாது.

மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, கால்களை உடம்பிற்கு முன்னே உயர்த்தி, பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, முடிந்தவரை இரண்டு கால்களையும் நன்றாக விரிக்க வேண்டும்.

கை, கால் முட்டிகளை மடக்கக் கூடாது. சிறிது நேரம் ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், சாதாரண நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

பயன்கள் : 
வயிற்று தசைகள் பலப்படும். கல்லீரல் நன்கு வேலை செய்யும். குடல் அசைவுகள், நன்கு ஊக்குவிக்கப்பட்டு மலச்சிக்கல் சரியாகும். இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும். முதுகு தண்டை வலுப்படுத்தும். கால்களுக்கு வலிமை தரும் ஆசனம் இது.

இந்த ஆசனப் பயிற்சியின் போது பின்னால் விழ வாய்ப்புள்ளது. எனவே சுவரின் முன் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். முதுகெலும்பு சிப்பி விலகல், உயர் ரத்த அழுத்தம் உள்ளோர் இந்த ஆசனம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages