கழுத்து, தொண்டைப் பகுதியை பாதுகாக்கும் உதான முத்திரை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2017

கழுத்து, தொண்டைப் பகுதியை பாதுகாக்கும் உதான முத்திரை

கழுத்து மற்றும் தொண்டைப் பகுதியைப் பாதுகாக்க உதவுகிறது உதான முத்திரை. இந்த முத்திரையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.கழுத்து, தொண்டைப் பகுதியை பாதுகாக்கும் உதான முத்திரைகழுத்து மற்றும் தொண்டைப் பகுதியைப் பாதுகாக்க உதவுகிறது உதான முத்திரை. மேல் நோக்கு வாயுவைக் கட்டுப்படுத்தும். அதாவது, கீழிருந்து மேல்நோக்கி வரும் ஏப்பம், வாந்தி, குமட்டல், சளித் தொந்தரவு, விக்கல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கும்.

செய்முறை :
கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் நுனியைச் சேர்த்து வைக்க வேண்டும். நடுவிரல் நுனியை ஆள்காட்டி விரல் நகத்தின் மீது வைக்க வேண்டும். சுண்டு விரல் மற்றும் மோதிர விரல் நீட்டி இருக்கட்டும். தரையில் சப்பளங்கால் இட்டு அமர்ந்தோ, நாற்காலியில் அமர்ந்து, தரையில் கால்கள் பதிந்த படியோ 30 - 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள் :
மனஅழுத்தத்தால் ஏற்படும் கழுத்து, தாடை, முக இறுக்கம் சரியாகும்.

பின் கழுத்து தடிமனாக வீங்கி இருத்தல், முன் கழுத்தும் பின் கழுத்தும் சேர்ந்து வளையமாக வீங்கி இருத்தல், கழுத்து இறுக்கம் ஆகியவை குணமாக, இதை மூன்று மாதங்கள் செய்ய வேண்டும்.

குரல் மாறுபாடு, கரகரத்த குரல், பேச்சுக் குறைபாடு ஆகியவை நீங்கும். மூச்சுத் திணறல் குறையும். நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages