அஸ்பெஸ்டோஸ் கூரைத்தகடுகளின் இறக்குமதிகளுக்கான தடை நீக்கம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2017

அஸ்பெஸ்டோஸ் கூரைத்தகடுகளின் இறக்குமதிகளுக்கான தடை நீக்கம்

அஸ்பெஸ்டோஸ் கூரைத்தகடுகளின் இறக்குமதிகளுக்கான தடை நீக்கம்
அஸ்பெஸ்டோஸ் கல்நார் கூரைத்தகடு பாவனை மற்றும் தயாரிப்பிற்கான மூலப்பொருளை இறக்குமதி செய்வதற்காக 2018ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த இறக்குமதி தடை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அஸ்பெஸ்டோஸ் தயாரிப்பு மற்றும் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை வரையறுத்து 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அஸ்பெஸ்டோஸ் 80 சதவீதமான கூரைத்தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

2018ஆம் ஆண்டிலிருந்து இந்த இறக்குமதியை தடைசெய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததினால் வீடுகளை நிர்மாணிப்போர் எதிர்கொண்டிருந்த சிரமங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக குறுகிய காலத்தில் பொருத்தமான மாற்று தயாரிப்பை சந்தையில் நியாயமான விலைக்கு பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதில் எதிர்நோக்கப்பட்ட சிரமம் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டது.

இது தொடர்பாக இன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை துணைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன கருத்து தெரிவிக்கையில் இந்த கூரைத்தகடுகள் தொடர்பில் மாற்று தயாரிப்புக்களை பெற்றுக்கொள்வதில் பிரச்சனைகள் எதிர்நோக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

முழுமையாக தடைசெய்யாhமல் படிப்படியாக அதனை குறைப்பதற்கு அடுத்தவருடம் முதல் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்படுவதை இடைநிறுத்துவதற்கு தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் தேகஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாக இந்த கூரைத்தகடுகளை இறக்குமதிசெய்யவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது.

ரஷ்யாவிலிருந்த இறக்குமதி செய்யப்படும் இந்த கூரைத்தகடுகள் உடல் ஆரோக்கியத்திற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படு;த்தாது என்று சான்றுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையிலேயே ஏற்கனவே ரஷ்ய நாட்டிலிருந்து இதற்கான மூலப்பொருட்கள் இறக்குமதிசெய்யப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages