எமது உரிமைகளை வென்றடுப்போம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2017

எமது உரிமைகளை வென்றடுப்போம்

Related image
ஒவ்வொருவரும் திறமையோடும் ஆளுமையோடும் இருக்குறார்கள். பலர் தங்களை தாங்களே உணருவதில்லை. யாரோ ஒருவருக்குப் பின்னால் இருக்கவே பெரும்பாலும் விரும்புகின்றனர். 
#அப்படி இருந்தால் நிச்சயமாக தட்டிக் கழிக்கப்படுவார்கள்.

ஒவ்வொருவரும் சிந்தித்து தனிமையில் புறப்படுங்கள் அப்போது தெரியும் உங்களை அன்போடு அணைக்க வரும் தலைமைகள் எத்தனை, பின்னால் வரும் தொண்டர்கள் எத்தனை என்று...
பதவியில் இருப்பவன் மட்டும்தான் தலைவன், ஆளுமையானவன் என்று இல்லை.

#ஒதுங்கி_இருப்பவர்கள்_புறப்பட்டால் 

#ஆயிரம்_ஹகீம்
#ஆயிரம்_சேகு
#ஆயிரம்_அதா
#ஆயிரம்_றிசாட்
#ஆயிரம்_தவம்
#ஆயிரம்_ஹரிஸ்
#ஆயிரம்_பைசர்_முஸ்தபா
#ஆயிரம்_பௌசி
#ஆயிரம்_முஜுபுர்ரஹ்மான்
#ஆயிரம்_ஹசன்_அலி
#ஆயிரம்_பசீர்_சேஹுதாவுத்
#ஆயிரம்_அலவி_மௌலானா
#ஆயிரம்_காதர்_மஸ்தான்
#ஆயிரம்_ஆசாத்_சாலி
#ஆயிரம்_ஹாபிஸ்_நசீர்
#ஆயிரம்_அலிசாஹிர்_மௌலானா

#உருவாகுவார்கள்

இளைஞர்களே, ஓய்வு பெற்ற ஆசிரியர்களே, வீட்டில் முடங்கி கிடக்கும் புத்திஜீவிகளே, அறிஞர்களே, மார்க்கவாதிகளே, அனுபவசாலிகளே, விவசாயிகளே, உழைப்பாளிகளே, மீனவர்களே, கடல் தொழிலாளிகளே, முகப்புத்தக புரட்சியாளர்களே  , 

புறப்படுங்கள் உங்கள் #தேர்தல்_விஞ்ஞாபனத்தை சேர்ந்தே எழுதுங்கள், உங்கள் குழந்தைகள் கையில் கொடுத்தாவது அதை முஸ்லீம் அரசியல்வாதிகளிடம் ஒப்படையுங்கள் நமது உரிமைகளை வென்றடுப்போம்.

சமகால அரசியல்வாதிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களை பார்க்கும்போது
#அவர்களுக்கு சார்பாகவும்
#அவர்களின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர்களுக்குச் சார்பாகவும்
#அவர்கள் பிரபலமாவதற்கு வித்திட்டவர்களுக்கும் சார்பாகவே எழுதப்படுகறது. 

அன்புள்ளம் கொண்ட சகோதரர்களே உங்கள் குழந்தைகளையும், பெற்றோர்களையும், சகோதர்களையும் உறவினர்களையும் பாதுகாப்பில் இருப்பவர்களையும் பராமரிப்பதற்காக பல குடும்பச் சுமைகளை சுமந்தவண்ணம்

தேனீர் கடையில் ரொட்டி அடித்துக்கொண்டும்
குபோட்டா ஓடிக்கொண்டும்,
ஆடு,மாடு வளர்த்துக் கொண்டும்,
கடைகளில் கூலிக்கு நின்றுகொண்டும்,
கூலி விவசாயம் செய்துகொண்டும்,
கரைவலை இழுத்துக்கொண்டும்,
களப்பில் பீன் பிடித்துக்கொண்டும்,
கள்ள மண் ஏத்திக்கொண்டும்,
கல்யாண வீட்டுக்கு பெயிண்ட் அடித்துக்கொண்டும்,
கோப்பிசம் அடித்துக்கொண்டும்,
மேசன் வேலை செய்துகொண்டும்,
கடலை வண்டில் தள்ளிக்கொண்டும்,
வீடி இலை போயிலை கொடுத்துக்கொண்டும்,
மோதின் வேலை செய்துகொண்டும்,
இது போன்ற பல வேலைகளை செய்தவண்ணம்  அரசியல்வாதிகளிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதியின் பெயர்கள் கூடத் தெரியாமல் குடும்ப சுமைக்காக ஒவ்வொரு நிமிடமும் துவண்டுகொண்டே இருக்கிறீர்கள். 
தங்கள் உரிமைகள் என்ன என்று கூடத்  தெரியாமல் வாக்குகளை அளித்துவிட்டு அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்கத் தெரியாமல், 

#அரசியல்வாதியை சந்திக்க நாம் போகலாமா...!
#என்னுடைய புஸ் சைக்கிளை நான் எங்கே சாத்துவது...!
#என்னுடைய ஆடை அழுக்காக இருக்கிறதே...!
#பாதனி ஐந்து வருடத்தை தாண்டியதே...!
#இப்படிச் சென்றால் என்னை கேவலமாகப் பார்ப்பார்களே...!
#வயிறு வளர்த்தவர்கள் இருப்பார்களே...!
#பல மொழிகள் பேசுவார்களே...!
#என்  குரல் யாருக்குக் கேட்கும்...!
#நவீன வாகனங்களைக் கண்டு என்...! துவிச்சக்கர வண்டி செல்ல மறுக்கிறதே..!
#என்ற தாழ்வு சிக்கலிலேயே உங்கள் வாழ்வு கடந்து செல்கிறது.
எல்லோரும் ஒன்றிணைந்து புறப்படுவோம் நமது உரிமைகளை வென்றடுப்போம்.
Gafrufais.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages