எதிர்வரும் வியாழக்கிழமை வரை உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுக்கள் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 19 December 2017

எதிர்வரும் வியாழக்கிழமை வரை உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுக்கள்

எதிர்வரும் வியாழக்கிழமை வரை உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுக்கள்
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுக்கள் எதிர்வரும் வியாழக்கிழமை பகல் 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன .
நாளை பகல் 12 மணிவரை கட்டுப்பணம் செலுத்தலாம். 248 உள்ளுராட்சி மன்றங்களுக்காக இரண்டாம் கட்ட வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 17 மாநகரசபைகள், 23 நகர சபைகள், 28 பிரதேச சபைகள், இரண்டாம் கட்டத்தின் கீழ் அடங்குகின்றன.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை உரிய தினத்தன்றோ, அதற்கு முன்னரோ சமர்ப்பிப்பது அவசியமாகும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்குள் சகல விண்ணப்பங்களும் தேர்தல் அலுவலகத்திற்குக் கிடைத்திருப்பது அவசியமாகும்.

எதிர்வரும் சனிக்கிழமை கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமைவாக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுலாகிறது.  15 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். தேர்தல் சட்டத்திற்கு அமைய, பேரணிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பேரணிகளை நடத்துவோர் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages