வாயுத்தொல்லையை குணமாக்கும் பூஷன் முத்திரை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2017

வாயுத்தொல்லையை குணமாக்கும் பூஷன் முத்திரை

பூஷன் முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் வயிறு உப்பசம், வயிற்றுவலி, வாயுத்தொல்லை, மந்தமான உணர்வு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
வாயுத்தொல்லையை குணமாக்கும் பூஷன் முத்திரைசெய்முறை :
விரிப்பின் மீது சப்பணம் இட்டு அமர்ந்து, வலது கை கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி மற்றும் நடுவிரல் நுனியைத் தொட வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

இடது கை கட்டை விரல் நுனியுடன் மோதிர விரல் மற்றும் நடுவிரல் நுனிகள் தொட்டு இருக்க வேண்டும். ஆட்காட்டி மற்றும் சுண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

20 முதல் 30 நிமிடங்கள் வீதம், ஒரு நாளைக்கு நான்கு முறை செய்யலாம்.

பலன்கள் :
உணவு செரிமானம் ஆகவும், செரித்த உணவை வெளியேற்றவும் உதவுகிறது. செரிமான உறுப்புக்களான சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், மண்ணீரலுக்கு சக்தி அளிக்கிறது.

நரம்புகளுக்கு ஓய்வு தருகிறது. முக்கியமாக முகத்தில் உள்ள நரம்புகள் பாதிப்பால் ஏற்படக்கூடிய வலியை (Trigeminal neuralgia) குறைக்கிறது. 

வயிறு உப்பசம், வயிற்றுவலி, வாயுத்தொல்லை, மந்தமான உணர்வு நீங்கும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages