ரஷ்யா விதித்துள்ள தேயிலைக்கான தடையை நீக்க நடவடிக்கை –பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2017

ரஷ்யா விதித்துள்ள தேயிலைக்கான தடையை நீக்க நடவடிக்கை –பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை

ரஷ்யா விதித்துள்ள தேயிலைக்கான தடையை நீக்க நடவடிக்கை –பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை
தேயிலை தொடர்பாக நேற்று நடைபெற்ற ஏலவிற்பனையில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று இரண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவினால் இலங்கை தேயிலைக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளப்பட்டுவருகின்றது.

தேயிலைக்கொழுந்து 1 கிலோ 100ரூபாவிற்கு மேற்பட்டதொகைக்கு கொள்வனவு செய்யப்படுகின்றது. இத்துறையில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் ரஷ்யாவிற்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நல்லுறவை கருத்தில் கொண்டும் ரஷ்யா இலங்கைக்கு விதித்துள்ள தேயிலை மீதான தடையை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

இதுதொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இடம்பெற்றுவருகின்றதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அராசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றபோது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சில அரசியல் வாதிகள் இந்த சம்பவத்தினூடாக குளம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க முயற்சிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கை தேயிலையில் வண்டு காணப்பட்டதாக தெரிவித்து அந்நாடு இலங்கை தேயிலையை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடைசெய்துள்ளது.
இதில் காணப்பட்ட ஒருவகை வண்டு இலங்கையில் மிக அரிதாகவே காணப்படுகின்றது. இது நாம் அனுப்பிய தேயிலைப்பொதியின்மேல் காணப்பட்டதாகதடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டு நாம் அனுப்பும் தேயிலை பொதிக்கப்பலில் கூட இருந்திருக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.


ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளின் சர்வதேச தரத்திற்கு அமைவாகவே நாம் எமது பொருட்களை ஏற்றுமதி செய்கின்றோம். இதற்கென உரிய துறையில் உறுதிசெய்யப்பட்ட சான்றிதழ்களுடனேயே பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ரஷ்யாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையில் முறுகல்நிலை உண்டுஎன்றும் அமைச்சர் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அஸ்பெஸ்ரோஸ் கூரைத்தகடுகளையும் அதற்கான மூலப்பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளபோதிலும் இத்தடை தற்காலிகமாகநீக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து இந்த மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கும் எமது தேயிலைக்ககான தடைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் விளக்கமளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages