வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 23 December 2017

வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

வியர்வை வெளியேறுவதனால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
வியர்வை வெளியேறுவதனால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. அதிலும் அந்த வியர்வையானது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதனாலோ அல்லது வெயிலில் நடந்து செல்வதாக இருந்தாலோ, எந்த வழியில் வியர்வை வெளியேறினாலும் அது நல்லது தான்.

வியர்வை வெளியேறுவது என்பது உடலின் தீவிர செயல்பாட்டின் ஓர் அறிகுறி. இந்த வியர்வையின் மூலம் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேறும். அதுமட்டுமின்றி வேறு சில நன்மைகளும் வியர்வை வெளியேறுவதன் மூலம் கிடைக்கிறது.

இப்போது வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

வியர்வை வெளியேற்றத்தின் போது, உடலில் மற்றும் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும்.

உடற்பயிற்சி செய்து வியர்வை வெளியேறும் போது மனநிலையை மேம்படுத்தி, சந்தோஷமாக உணர வைக்கும் எண்டோர்பின் ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages