ஆஸ்துமாவை குணமாக்கும் சுவாசகோச முத்திரை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2017

ஆஸ்துமாவை குணமாக்கும் சுவாசகோச முத்திரை

இருமல், இரைப்பு, இருமினாலும் சளி வெளிவராமை, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு சுவாசகோச முத்திரை தீர்வு அளிக்கிறது.
ஆஸ்துமாவை குணமாக்கும் சுவாசகோச முத்திரைபொதுவாக குளிர், மழைக்காலங்களில் அல்லது தூசி ஒவ்வாமை போன்ற காரணங்களால் ஆஸ்துமா எனப்படும் இரைப்பு நோய், ஏற்படுகிறது. எனவே இருமல், இரைப்பு, இருமினாலும் சளி வெளிவராமை, மூச்சுத்திணறல், காற்றுக்காக​ ஏங்குதல், மூச்சடைப்பு ஏற்படுகிறது. இதற்கான நிரந்தரத் தீர்வை மருந்துகள் மூலம் அடைய முடிவது இல்லை. சுவாசகோச முத்திரை இதற்குத் தீர்வு அளிக்கிறது.

செய்முறை :
பெருவிரலில் உள்ள அடி ரேகை, நடு ரேகை மற்றும் நுனியைக் கவனிக்க வேண்டும். பின்னர் சுண்டுவிரலால் கட்டை விரலின் அடி ரேகையையும் மோதிர விரலால் கட்டை விரலின் இரண்டாவது ரேகையைத் தொட்டும், நடுவிரலின் நுனியால் கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். ஆள்காட்டி விரலை மட்டும் முழுமையாக மேல்நோக்கி நீட்டிவைக்க வேண்டும்.

இந்த முத்திரையில் கையின் உள்ளங்கைப் பகுதி வெளிநோக்கிப் பார்க்க, ஆள்காட்டி விரலை 90 டிகிரி மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும். கையை கவிழ்த்துவைத்தோ, கீழ்நோக்கியோ செய்யக் கூடாது.

விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டோ, நாற்காலியில் அமர்ந்தோ கால்களை தரையில் ஊன்றியோ, அவசர காலத்தில் படுத்த நிலையிலோ இந்த முத்திரையைச் செய்யலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 5 முதல் 6 முறை செய்யலாம். அல்லது இரைப்பு, இருமல் குறையும் வரை செய்துகொண்டே இருக்கலாம்.

ஒவ்வொரு முறையும் 5 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். தீவிரமான இரைப்பு இருக்கும் காலங்களில் நேரம் கணக்கிடாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.
பலன்கள் :
குழந்தைகள் முதல் வயோதிகர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்படும் இரைப்பிருமல் கட்டுக்குள் வரும்.

மழைக்காலங்களில் நெஞ்சில் சளி உருவாவது தடுக்கப்படும். மூச்சுத்திணறல், மூச்சுக்குழல் இறுக்க ஆகியவை குறையும்.

ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து செய்துவர, 3 மாதங்களில் நோயின் தீவிரம் குறையும். மூச்சுவிடுதல் எளிமையாகும். இன்ஹேலர் பயன்படுத்துவதாக இருப்பின் அதன் அவசியமும் படிப்படியாகக் குறையும்.

இரைப்பிருமல் வரத்தொடங்கி ஆரம்ப நிலையில் இருக்கும் எல்லா குழந்தைகளும் இந்த முத்திரையை தினமும் செய்ய வேண்டும்.

இன்ஹேலர் பயன்படுத்தும் நிலை வருவதற்கு முன், இந்த முத்திரையைச் செய்து வர ஆஸ்துமா வராது. ஆஸ்துமா நோய் வராமல், வருமுன் காக்க இந்த முத்திரை உதவும்.

இன்ஹேலர், மருந்துகள், மருத்துவர் இல்லாத சமயங்களில் இந்த முத்திரை முதலுதவியாக மூச்சுத்திணறல் குறையும் வரை பயன்படுத்தலாம்.

சளி தொந்தரவுகள், தும்மல், அலர்ஜி ஆகியவை சரியாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages