மாலி நாட்டிற்கு செல்லவுள்ள இராணுவத்தின் பிரதிநிதிகள் - பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 24 December 2017

மாலி நாட்டிற்கு செல்லவுள்ள இராணுவத்தின் பிரதிநிதிகள் - பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

மாலி நாட்டிற்கு செல்லவுள்ள இராணுவத்தின் பிரதிநிதிகள் - பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு
மாலி நாட்டின் ஐக்கிய நாடுகளின் பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக செல்லவுள்ள இலங்கை இராணுவத்தின் பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்னவை சந்தித்தனர்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு செயலாளர், மாலி நாட்டின் ஐக்கிய நாடுகளின் பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக செல்ல இருக்கும் குழுவினர் தமது பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்ள வாழத்துக்களை தெரிவித்தார். பாதுகாப்பு செயலாளரின் வாழத்துக்களுக்கு குழுவின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் களன அமுனுபுர குழு சார்பாக நன்றியை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages