73 சதவிகிதம் பேரின் சொத்துக்கள் 1 சதவிகிம் பேரின் கையில், பதில் சொல்லுங்கள் பிரதமரே - ராகுல் காந்தி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 23 January 2018

73 சதவிகிதம் பேரின் சொத்துக்கள் 1 சதவிகிம் பேரின் கையில், பதில் சொல்லுங்கள் பிரதமரே - ராகுல் காந்தி

இந்தியாவின் 73 சதவிகிதம் பேரின் சொத்துக்கள் 1 சதவிகிதத்தினர் கைகளில் இருப்பதாக வெளியான தகவல் தொடர்பாக உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பேச வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
73 சதவிகிதம் பேரின் சொத்துக்கள் 1 சதவிகிம் பேரின் கையில், பதில் சொல்லுங்கள் பிரதமரே - ராகுல் காந்தி

புதுடெல்லி:

பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட ஆக்ஸ்பாம் நிறுவனம், உலகம் முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அதனால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் மொத்த சொத்துக்களில் 73 சதவீதம், ஒரு சதவிகித கோடீஸ்வரர்கள் கையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அவர்களால் உருவாக்கப்பட்ட சொத்து மதிப்பு 20.9 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது, மத்திய அரசின் 2017-18 பட்ஜெட்டிற்கு நிகரான தொகையாகும். இதில் 37 சதவிகிதம் பேர் குடும்ப சொத்துக்களின் மூலம் பணக்காரர்களானவர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதார திட்டங்கள், ஏற்கனவே சொத்து வைத்துள்ளவர்கள் புதிய தொழில்களை தொடங்கி அதில் அதிக வருவாய் ஈட்டும் சூழல்களை உருவாகியுள்ளது. இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 58 சதவிகிதமாக அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages