குழந்தைகள் அழுவதற்கான காரணங்களும் - தீர்வும் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 26 January 2018

குழந்தைகள் அழுவதற்கான காரணங்களும் - தீர்வும்

குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம் என்பதையும், அமைதிப்படுத்தும் வழிகளை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்

குழந்தைகள் அழுவதற்கான காரணங்களும் - தீர்வும்

குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம் என்பதையும், அமைதிப்படுத்தும் வழிகளை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம். 

பொதுவாக, குழந்தைகளின் அழுகைக்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

1. பசியினால் அழலாம்
2. வயிற்றில் உள்ள வாயு வெளியேறுவதற்காக
3. சிறுநீர் கழிப்பதற்காக

குழந்தைகள், இவை போன்ற அசாதாரண நிலையைத் தெரிவிப்பதற்காகவே அழுவார்கள்.

சில குழந்தைகள், அம்மாவின் அரவணைப்பைத் தேடி அழும். சில, அம்மா நம்மை ரொம்ப நேரமாக கவனிக்கவில்லையே என்பதற்காக அழும். ஈ, எறும்பு தொந்தரவு இருந்தாலும் படுக்கை வசதி சரியில்லாமல் இருந்தாலும் அழுவார்கள்.

பிறந்த குழந்தை, பால் குடித்து வயிறு நிறைந்துவிட்டால், இரண்டரை அல்லது மூன்று மணி நேரம் வரை தூங்கும். அரை மணி நேரத்துக்குள் அழுதால், என்ன பிரச்சனை என்பதை அறிய வேண்டும். டாக்டரிடம் காட்டி, அதைச் சரிசெய்ய வேண்டும். நான்கு, ஐந்து மாதங்கள் வரைதான் இந்தப் பிரச்னைகள் இருக்கும்.

சற்று வளர்ந்த குழந்தைகளுக்கு :

கூட்டமான இடங்களில் இரைச்சலாக இருப்பது, சுவாசிக்க போதுமான காற்று இல்லையென்றால், பூச்சிக் கடித்திருந்தால், வயிறு வலித்தால், குளிர் காலத்தில் மற்றும் சளி இருந்தாலும் காது வலிக்கும் இவற்றாலும் குழந்தைகள் அழக்கூடும்.

குழந்தையைப் பாதுகாக்கும் பெற்றோர் கீழ்காணும் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

1. தாய்ப்பால் முழுமையாகக் கொடுக்க வேண்டும்.
2. கதகதப்பாக வைத்துக்கொள்ளவும்.
3. குழந்தையைத் தூக்கும் முன், நம் கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
4. ஜலதோஷம் உள்ளவர்கள் தூக்கக்கூடாது.

மிதமான காற்றும் லேசான சூரிய ஒளியும் குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இப்படியெல்லாம் உங்கள் குழந்தையைப் பார்த்துக்கொண்டால், எப்போதும் புன்னகைதான்.No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages