இரட்டை பிரஜா உரிமை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்தமாதம் ஆரம்பம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 22 January 2018

இரட்டை பிரஜா உரிமை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்தமாதம் ஆரம்பம்

இரட்டை பிரஜா உரிமை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்தமாதம் ஆரம்பம்
இரட்டை பிரஜா உரிமை வழங்ககும் வேலைத்திட்டம் அடுத்தமாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் 31 ஆயிரம் பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இரட்டை பிரஜா உரிமைக்காக இதுவரையில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 16 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்கு உட்பட்ட பிரஜைகளுக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு கைவிரல் அடையாளம் தற்போது பெற்றுக் கொள்ளப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ள பிரஜைகளுக்கு இலங்கை பிரஜா உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கு அல்லது தமது கடவுச்சீட்டைப் புதுப்பிப்பதற்கு இணையத்தளத்தின் ஊடாக வசதிகள் விரைவாக செய்து கொடுக்கப்படுமென்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages