மீண்டும் ஊழல் யுகத்திற்கு திரும்ப வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிப்பது அவசியம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 26 January 2018

மீண்டும் ஊழல் யுகத்திற்கு திரும்ப வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிப்பது அவசியம்

மீண்டும் ஊழல் யுகத்திற்கு திரும்ப வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிப்பது அவசியம்
நீதியான சமூகத்திற்கான தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கம் வரலாற்று சிறப்புமிக்க புரட்சிகரமான வெற்றியை பதிவு செய்து மூன்றாண்டுகள்; பூர்த்தியாகியுள்ளதென நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் பதிவு செய்த வெற்றிகள் ஏராளம். எனினும் எதிர்காலத்தில் பல சவால்களை வெற்றி கொள்ள வேண்டியிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் நேற்று விடுத்த அறிக்கையில் சவால்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இன்னும் மூன்று வாரங்களில் தேசத்தின் முன்னேற்ற பயணத்தை தீர்மானிக்கக் கூடிய முக்கியமான தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த காலத்தில் முறையாக கட்டியெழுப்பப்பட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமா, சீர்குலைக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இது அமையும்.

இது தவிர, நாட்டு மக்கள் சுதந்திரத்தின் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டுமா, ஒரு குடும்பத்தின் அராஜக ஆட்சிக்கு அஞ்சி தலைகுனிந்து வாழ வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் தேர்தலாகவும் அமையும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages