உயர்த்தப்பட்ட சம்பளம் வேண்டாம்: சபாநாயகருக்கு, டி.டி.வி.தினகரன் கடிதம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 24 January 2018

உயர்த்தப்பட்ட சம்பளம் வேண்டாம்: சபாநாயகருக்கு, டி.டி.வி.தினகரன் கடிதம்

எம்.எல்.ஏக்களுக்காக உயர்த்தப்பட்ட சம்பளம் வேண்டாம் எனவும் சட்டமசோதா நிறைவேறுவதற்கு முன்பு இருந்த சம்பளத்தையே தனக்கு வழங்கும்படியும் சபாநாயருக்கு, டிடிவி தினகரன் கடிதம் எழுதியுள்ளார்.
உயர்த்தப்பட்ட சம்பளம் வேண்டாம்: சபாநாயகருக்கு, டி.டி.வி.தினகரன் கடிதம்

சென்னை:

தமிழக சட்டசபை சபாநாயகர் ப.தனபாலுக்கு, ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் மற்றும் படி ஆகியவை சேர்த்து மாதந்தோறும் ரூ.55 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதியன்று இந்தத் தொகையை ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அதை சட்டசபையில் அறிமுக நிலையிலேயே எதிர்த்தேன். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவும், பல திட்டங்களை செயல்படுத்த முடியாத அளவுக்கு நிதி பற்றாக்குறை இருப்பதாலும் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

ஆனாலும் எம்.எல்.ஏக்களுக்கு சம்பளத்தை உயர்த்தும் அந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. எனவே உயர்த்தப்பட்ட சம்பள உயர்வை நான் விட்டுக்கொடுக்கிறேன். சட்டமசோதா நிறைவேறுவதற்கு முன்பு இருந்த சம்பளத்தையே எனக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages