யொவுன்புர இளையோர் முகாம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, 29 January 2018

யொவுன்புர இளையோர் முகாம்

யொவுன்புர இளையோர் முகாம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் தேசிய இளையோர் கழக சம்மேளனமும் இணைந்து வருடாந்தம் நடத்தும் யொவுன்புர இளையோர் முகாமை இம்முறை குருநாகல் மாவட்டத்தில் நடத்தப்படவுள்ளது. 
மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் ஏப்பிரல் 2ஆம் திகதி வரை நடைபெறும் இந்த இளையோர் முகாமின் நிறைவு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்வார்கள். 
கலாசாரப் போட்டிகள், விளையாட்டு, இன நல்லுறவை விருத்தி செய்யும் நிகழ்ச்சிகள், வெளிநாட்டு இளைஞர் யுவதிகளின் பங்கேற்பு என்பன இதன் சிறப்பம்சங்களாகும். இளையோர் பாராளுமன்றத்தின் விசேட அமர்வொன்றும்  அங்கு இடம்பெறும். இம்முறை இளையோர் முகாமில் 20 ஆயிரத்திற்கும் 25 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் பங்கேற்கவுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages