எங்களிடமும் பெரிய வலிமையான அணுகுண்டு ஸ்விட்ச் உள்ளது” டிரம்ப் பதிலடி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 3 January 2018

எங்களிடமும் பெரிய வலிமையான அணுகுண்டு ஸ்விட்ச் உள்ளது” டிரம்ப் பதிலடி

அணுகுண்டுக்கான ஸ்விட்ச் எனது மேஜையில்தான் உள்ளது என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருந்த நிலையில், எங்களிடமும் பெரிய, வலிமையான ஸ்விட்ச் உள்ளது என டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்Image result for trump and washington

வாஷிங்டன்:
புத்தாண்டை ஒட்டி தொலைக்காட்சியில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், “ஒட்டுமொத்த அமெரிக்காவின் நிலப்பரப்பு நமது அணு ஆயுதத்தின் எல்லையில் உள்ளது. அதற்கான ஸ்விட்ச் எனது மேஜையில்தான் எப்போதும் உள்ளது” என கூறியிருந்தார்.

இந்நிலையில், கிம் ஜாங் உன்னுக்கு பதிலடி கொடுத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ‘அணுகுண்டுக்கான ஸ்விட்ச் அவரது மேஜையில் எப்போதும் இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார். அந்த பகுதியில் குறைபாடுகளுடன் பட்டினி கிடக்கும் யாராவது அவரிடம் கூறுங்கள், எங்களிடமும் அணுகுண்டு ஸ்விட்ச் உள்ளது. ஆனால், இது மிகப்பெரிதாக, வலிமையானதாக இருக்கும். முக்கியமாக எங்களது ஸ்விட்ச் செயல்படும் நிலையில் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

சில மாதங்களாக இருவருக்கும் வார்த்தை மோதல்கள் இல்லாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டில் தொடக்கத்திலேயே வாய் தகராறு தொடங்கி விட்டது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages