மறைந்த சங்கைக்குரிய பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய முக்கியஸ்தர்கள் பங்கேற்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 9 February 2018

மறைந்த சங்கைக்குரிய பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய முக்கியஸ்தர்கள் பங்கேற்பு

மறைந்த  சங்கைக்குரிய பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் இறுதிக் கிரியைகளில்  ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய முக்கியஸ்தர்கள் பங்கேற்பு

மறைந்த மதகுரு சங்கைக்குரிய பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றன.
 
02 1 1

இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த மதகுரு பௌத்த கோட்பாடுகளை தேசிய ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் புகழ் பெறச் செய்வதற்கு ஆற்றிய சேவைகள் மிகச் சிறப்பானவை. எப்போதும் ஸ்திரமான கருத்துக்களுடன் நடுநிலை பேணி சமூக அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த விதத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில்இ சங்கைக்குரிய பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர்இ தேசிய ஒற்றுமையை நடைமுறைச் சாத்தியமான விதத்தில் ஏற்படுத்திக் காட்டியவர் என்றார்.
கொழும்பு மறைமாவட்ட பேராயர் பேரருட்திரு கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இரங்கல் உரை ஆற்றிய போதுஇ மதங்களுக்கு இடையில் நிலவ வேண்டிய நட்புறவை முறையாகப் புரிந்து கொண்ட மதகுரு என பெல்லன்வில விமலரத்ன தேரரை பாராட்டினார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகளில் பிரதமர்  ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல முக்கிய முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள். No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages