ஐக்கிய தேசியக் கட்சியின் எந்த உறுப்பினரும் தொடர்புபடவில்லை - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 1 February 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் எந்த உறுப்பினரும் தொடர்புபடவில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் எந்த உறுப்பினரும் தொடர்புபடவில்லை
திறைசேரி முறிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமையஇ ரவி கருணாநாயக்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் எந்த உறுப்பினரும் திறைசேரி முறிகள் பற்றிய கொடுக்கல் வாங்கலில் தொடர்புபடவில்லை.
 
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். 
 
பேர்பச்சுவல் ட்ரெசரி நிறுவனத்தின் உரிமையாளருக்குச் சொந்தமான போல்ட் அன்ரி ரோ தனியார் நிறுவனம் வழங்கிய வாடகையினால் ரவி கருணாநாயக்க சட்டவிரோதமான முறையில் நன்மையடைந்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அவருக்கு எதிராக சட்டம் பிரயோகிக்கப்பட வேண்டுமா? என்பது பற்றி சட்டமா அதிபரோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவோ தீர்மானிக்க வேண்டுமென்று ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்திருக்கிறது. 
 
ரவி கருணாநாயக்க பொய் சாட்சியம் வழங்கியுள்ளதாக தெரிகிறது என குறிப்பிட்டுள்ள ஆணைக்குழு அது பற்றி தண்டனை வழங்குவது தொடர்பாக சட்டமா அதிபரோ உரிய நிறுவனங்கள் கண்டறிவது அவசியம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages