பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 4 February 2018

பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  விடுத்துன்ன வாழ்த்துச் செய்திபின்வருமாறு: 
 
 
 
சுதந்திர தினச் செய்தி
காலனித்துவ ஆட்சியிலிருந்து பெற்ற சுதந்திரத்தின் 70 ஆண்டுப் பூர்த்தியை நாம் இன்று மிகுந்த அபிமானத்துடன் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறோம். அனைத்துப் பேதங்களையும் மறந்து ஒரே இலங்கை மக்களாக தேசிய ஒற்றுமையுடன் செயற்பட்டமையினாலேயே 1948 ஆம் ஆண்டில் அந்த சுதந்திரத்தை எம்மால் பெற்றுக் கொள்ள முடிந்தது.

பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்க வேண்டுமாயின் அனைத்து வகையான இன, மத, கட்சி, நிற பேதங்களையும் தாண்டி 'ஒரே நாட்டு மக்களாக' அபிமானத்துடன், அமைதியாக, ஒற்றுமையாக செயற்படுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

சமூக, அரசியல், பொருளாதார சுதந்திரத்தைப் போன்றே மனித கண்ணியம், ஆன்மீக சுதந்திரமும் உருவாவதன் மூலமே சுதந்திரம் பூரணத்துவம் அடைகிறது. எமது அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் அதற்குத் தேவையான சமூக, அரசியல், பொருளாதாரப் பின்புலத்தைக் கட்டியெழுப்புவதற்காக பல்வேறுபட்ட துறைகள் ஊடாக நடவடிக்கை மேற்கொண்டதுடன், மிகவும் நிலையான சுதந்திர சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்குத் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

'ஒரே நாட்டு மக்கள்' எனும் கருபொருளுடன் 70 ஆவது சுதந்திர தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை மிகவும் நிலைபேறான, அர்த்தமுள்ள சுதந்திரமாக மாற்றிக் கொள்ள அனைத்து இலங்கை மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதைக் காண விரும்புகிறேன்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக உண்மையான பிரஜைகளாக அர்ப்பணிப்புடன் செயற்பட இந்த சுதந்திர தினத்தில் விசேடமாக உறுதி பூணுவோம்.

ரணில் விக்கிரமசிங்க
பிரதம அமைச்சர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages