இணைய பாதுகாப்பு செயல்பாட்டு நிலையம் பாதுகாப்பு செயலாளரினால் திறப்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 28 February 2018

இணைய பாதுகாப்பு செயல்பாட்டு நிலையம் பாதுகாப்பு செயலாளரினால் திறப்பு

இணைய பாதுகாப்பு செயல்பாட்டு நிலையம் பாதுகாப்பு செயலாளரினால் திறப்பு

கொழும்பு புதிய விமானப்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள இணைய பாதுகாப்பு செயல்பாட்டு நிலையம் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்னவினால் திறந்துவைக்கப்பட்டது.
விமானப்படைத் தலைமையகத்திற்கு நேற்று வருகைதந்த பாதுகாப்பு செயலாளரை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி வரவேற்றார்.

பாதுகாப்பு செயலாளருக்கு விமானப்படை வீரர்களினால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பாதுகாப்பு செயலாளரினால் இணைய பாதுகாப்பு செயல்பாட்டு நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

பின்னர் பாதுகாப்பு செயலாளர் , விமானப்படைத் தளபதி மற்றும் சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகளுடன் இணைந்து விமானப்படைத் தலைமையகத்தைச் சுற்றி பார்வையிட்டார்.

இப்புதிய இணைய பாதுகாப்பு செயல்பாட்டு நிலையமானது 24 மணி நேரமும் செயற்படவுள்ளது. இப்பணியினை செவ்வனே நிறைவேற்ற முப்படைகளில் உள்ள இத்துறை சார்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages