பொலிசார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 1 February 2018

பொலிசார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு

பொலிசார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு
நேற்றிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனைகள் மூலம் பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய  இந்த நடவடிக்கையின் போது விதிமுறைகளை மீறியதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
11 மணி தொடக்கம் இன்று அதிகாலை மூன்று மணி வரையில் ஆயிரத்து 300 இற்கு மேற்பட்ட வீதிச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்தக் காலப்பகுதியில் 21 ஆயிரம் வாகனங்களையும் 42 ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்களையும் சோதனையிட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன்போது சுமார் 14 கிராம் ஹெரோயினும் 11 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சாவும் கைப்பற்றப்பட்டன. சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மூவாயிரத்து 860 லீற்றர் மதுபானமும் மீட்கப்பட்டன.
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் மூவாயிரத்து 700 இற்கு மேற்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 554 பேர் கைதானார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages