இயற்கை மருத்துவத்தில் நோய்களுக்கான தீர்வுகள்! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, 13 February 2018

இயற்கை மருத்துவத்தில் நோய்களுக்கான தீர்வுகள்!


பப்பாளி 4 துண்டுகள் எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன், கடலை மாவு ஒரு டீஸ்பூன் சேர்த்து கரைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து நல்ல நீரில்  கழுவினால் முகம் பளிச் என மின்னும்.
கொத்தமல்லித் துவையல் தினமும் சாப்பிட வேண்டும். கொத்தமல்லியில் உள்ள லினாலூல் மற்றும் கொரியாண்டிரின் ஆகியவை ரத்த அழுத்தத்தைத் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
 
கால் கப் பாலில் ஆறு பாதாம் பருப்பை சேர்த்து மூன்று மணி நேரம் வரை ஊறவைத்து, எலுமிச்சை சாறு சேர்த்து அரைக்கவும். அதை முழங்கை, முழங்காலில் தடவி பத்து நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் அங்கு இருக்கும் கருமை மறைந்துவிடும்.
 
எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள வைட்டமின் ‘சி’ உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும்.
 
பிரண்டைத் தண்டுகளைக் கணு நீக்கித் துவையல் செய்து சாப்பிடலாம். பிரண்டையில் உள்ள பைட்டோஸ்டீரால் மற்றும் நார்ச்சத்து கொழுப்பைக் குறைக்கும்.
 
நாயுருவி வேரைப் பொடித்து நான்கு பங்கு நீர்விட்டு, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தினால், சிறுநீரைப் பெருக்கி பித்த அமிலங்களை வெளியேற்றும். கல்லீரலின் கொழுப்பை குறைக்கும்.
 
அருகம்புல் சாறுடன் பால் சேர்த்து அருந்தினால், அதில் உள்ள பீட்டா சிட்டோஸ்டீரால் வைட்டமின் சி, பீட்டா கரோடின் ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தை  குறைக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages