பண்டிகைக் காலத்திற்கு போதுமான முட்டை மற்றும் கோழி இறைச்சி நாட்டில் உண்டு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 18 March 2018

பண்டிகைக் காலத்திற்கு போதுமான முட்டை மற்றும் கோழி இறைச்சி நாட்டில் உண்டு

பண்டிகைக் காலத்திற்கு போதுமான முட்டை மற்றும் கோழி இறைச்சி நாட்டில் உண்டு

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு போதுமான முட்டை மற்றும் கோழி இறைச்சி நாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் நிஹால் வெதசிங்க தெரிவிக்கையில் நாட்டு மக்களின் தேவையை பூர்த்திச்செய்யக்கூடிய போதுமான முட்டை மற்றும் கோழி இறைச்சியிருப்பதினால் இவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை. பண்டிகைக் காலத்திற்கு தேவையான முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை மொத்தமாக விநியோகிப்பதற்கு உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளனர் என்று தெரிவித்தார்.
 
 
 நாட்டில் மாதம் ஒன்றுக்கு முட்டையின் தேவை 18 கோடி ஆகும். உற்பத்தி 22 கோடியாகும் என்றும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இதனால் முட்டையை இறக்குமதி செய்வதற்கு எந்தவித தேவையும் இல்லை. முட்டையை இறக்குமதி செய்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும்  கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் நிஹால் வெதசிங்க  மேலும் தெரிவித்தார்.  


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages