விசேட பொலிஸ் குழு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, 18 March 2018

விசேட பொலிஸ் குழு

விசேட பொலிஸ் குழு

வறையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் கேற்ரிங், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ், மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் பற்றி விசாரணை நடத்தும் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இந்தக் குழு இயங்கவுள்ளது. பத்து பொலிஸ் அதிகாரிகள் இதில் இடம்பெற்றுள்ளார்கள்.

2006ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் திகதியிலிருந்து 2018 ஜனவரி 31ம் திகதி வரையிலான காலப்பகுதியில் கிடைத்த முறைப்பாடுகள் பற்றி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சகல முறைப்பாடுகளும் ஏப்ரல் மாதம் 12ம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages